நாகர்கோயிலில் குப்பை மேடு

நாகர்கோயிலில் குப்பை மேடு

Published by Arun Isaac on

In other languages: English

Tags: நாகர்கோயில், குப்பை, சுற்றுச்சூழல்

நாகர்கோயிலில் வளர்ந்து வரும் திடக்கழிவு சிக்கலின் வெளிப்பாடாக குப்பை மேடொன்று

"நாகர்கோவில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட மையம்" என்னும் பலகை பின் வளர்ந்துக் குவிந்துக் கிடக்கும் பெரும் குப்பை மேடு. சரக்கு வண்டிகளுடனும் மண்வாரியுடனும் குப்பையைத் திரட்டும் துப்புறவுப் பணியாளர்.

Figure 1: நாகர்கோயில்க் கடற்கரைச் சாலையில் குப்பை மேடு

விடுமுறைக்காக சொந்த ஊரான நாகர்கோயில் வந்தேன். ஒவ்வொரு முறை வரும் போதும் நாகர்கோயிலின் பொருளாதார வளர்ச்சியையும் வெவ்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இங்குக் கடை போட்டிருப்பதையும் காண்கிறேன். அதனுடன் சேர்ந்து இப்போது நாகர்கோயில்க் கடற்கரைச் சாலையில் (Beach Road) குப்பை மேடொன்றும் தோன்றியுள்ளது. இந்தியா முழுவதும் வளர்ந்து வரும் திடக்கழிவு சிக்கலின் வெளிப்பாடு இது.