git-bug: பயன்படுத்துவது எப்படி?
Published by Arun Isaac on
In other languages: English
Tags: git, மென்பொருள்
git-bug இணையமில்லா நிலையிலும் இயங்கும் பரவலாக்கப்பட்ட வழு குறிப்பகம் (distributed offline-first issue tracker). இதை அண்மையில் Guix க்குப் பொதித்தேன். இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நீங்களும் இவ்வாறு பயன்படுத்தலாம்:
guix shell கொண்டு git-bug நிறுவுக
எப்போதும் போல் guix shell கொண்டு git-bug யை நிறுவுக.
guix shell git-bug
git-bug பயனர் உருவாக்குக
git, GitHub, Codeberg போன்றவை தொடர்பில்லாது git-bug யில் தனி பயனர் உண்டு. git-bug பயன்படுத்த இப்பயனர் கட்டாயம் தேவை. அதனால் முதலில் பயனரொன்றை உருவாக்குக.
git bug user new
வலை இடைமுகத்தைத் துவக்கி வழுக்களை உருவாக்குக
தொலை git களஞ்சியத்திற்குத் (git remote) தள்ளு
வழுக்களை உருவாக்கியவுடன், அவற்றைத் தொலை git களஞ்சியத்திற்குத் தள்ள வேண்டும். git bug push கட்டளை git push கட்டளையிலிருந்து வேறுபட்டது; அதைத் தனியாக இயக்க வேண்டும்.
git bug push
இன்னொருக் கணினியிலிருந்து இழு
இப்போது நம் உடனுழைப்போர் அவர் கணினியில் git bug pull இயக்கி வழுக்களைப் பெறலாம். உங்கள் களஞ்சியத்தை நீங்களே வேறிடத்தில் clone செய்து இதைச் சரி பார்க்கலாம். முதல் முறை, நீங்கள் (அல்லது உங்கள் உடனுழைப்போர்) புதிய git-bug பயனரொன்றை அமைக்க வேண்டும். பின் git bug pull இயக்கி, அதன் பின் git bug webui இயக்கி வழுக்களுடன் ஊடாடலாம்.
git bug user new git bug pull git bug webui
