exiftool.el வெளியீடு
Published by Arun Isaac on
In other languages: English
Tags: மென்பொருள், கட்டற்ற_மென்பொருள்
இது exiftool.el வெளியீட்டிற்கான பொது அறிவிப்பு. exiftool.el ExifTool யை emacs lisp யிலிருந்து பயன்படுத்துவதற்கான நிரலகமாகும். ExifTool EXIF, XMP, IPTC மற்றும் பல்வேறு மேல்நிலை தரவு வடிவங்களை எழுதவும் படிக்கவும் பயன்படும் கட்டளை வரி மென்பொருளாகும். exiftool.el யின் வெளியீட்டிற்கு முன் அது எனது வலைப்பதிவு வெளியீட்டமைப்பின் ஒரு பாகமாக இருந்தது. எனது வலைப்பதிவில் படங்களிலுள்ள XMP மேல்நிலை தரவைப் படிக்கவும் எழுதவும் அதனைப் பயன்படுத்தினேன். எனது வலைப்பதிவு வெளியீட்டமைப்பை நான் இன்னும் வெளியிடவில்லை. பிற்காலத்தில் வெளியிடலாம். தற்போது exiftool.el போன்று பொது பயனுள்ள செயலாற்றிகளைப் பிரித்தெடுத்துத் தனித்தனி நிரலகங்களாக வெளியிட்டு வருகிறேன்.
exiftool.el யின் மூலத்தை அதன் git களஞ்சியத்திலிருந்து பெறலாம். exiftool.el MELPA Emacs களஞ்சியத்திலும் உள்ளது.