ஹூத் ஹூத் புயல் – செயற்கைகோள் படம்
Published by Arun Isaac on
In other languages: English
Tags: வானொலி, செயற்கைகோள், rtlsdr, மென்பொருள்_வானொலி, வானிலை
Figure 1: 11-10-2014 அன்று 1351 IST க்கு பெங்களூரில் NOAA 19 செயற்கைகோளிடமிருந்து பெற்ற ஹூத் ஹூத் புயல் படம்
அக்டோபர் 11 அன்று பெங்களூரில் பெற்ற ஹூத் ஹூத் புயல் APT செயற்கைகோள் படம். படத்தின் மேல் பகுதியில் இரைச்சல் கோடு ஒன்றிருந்தாலும், நான் பெற்ற செயற்கைகோள் படங்களிலேயே மிகச் சிறந்தது இது தான் என்பேன்.
குறிப்பலைகளைப் பெறுவதற்கும் குறிப்பிறக்குவதற்கும் quadrifilar helix (சுருளை) அலைக்கம்பம், rtlsdr, gqrx, wxtoimg, ஆகியவற்றை பயன்படுத்தினேன். என்னுடைய சுருளை அமைப்புப் பற்றி முன்னர் இடுகை The Quadrifilar Helix and APT Yet Again! யில் விவரித்துள்ளேன்.
இது போக, என் வானொலி உரிமத்தையும் பெற்றுக் கொண்டேன். இது இந்திய அரசு பணித்துரையிடம் மூன்று வருடம் போராடியப் பின்பு கிடைத்தது. குறித்துக்கொள்ளுங்கள், எனது விளி சைகை VU3VJF.