IISc மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம்
Published by Arun Isaac on
In other languages: English
Tags: ஆதார், அந்தரங்கம், iisc
உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக, இக்கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அடையாள அட்டையை இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூர் (Indian Institute of Science, Bangalore – IISc) கட்டாயமாக்கியுள்ளது. மேலும், ஜூன் 29, 2016 நாளிட்ட இந்த UGC அறிவிப்பு 2016-17 நிதியாண்டு முதல் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்கிறது.
IISc யில் பெரும்பான்மையோர் கல்வி உதவித் தொகையை நம்பி வாழ்கின்றனர். மேலும் பலர் அவர் குடும்பத்தினருக்குக் கல்வி உதவித் தொகையிலிருந்து மாதாமாதம் பணம் அனுப்புவதுமுண்டு. இவ்வாறு அரசாங்கம் இவர்கள் வாழ்க்கைப் பிழைப்பை அச்சுறுத்தி, ஆதாருக்குப் பதிவு செய்ய வற்புறுத்திகிறது.
ஆதார் மக்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்கு அரசுக்கு அளவற்ற அதிகாரத்தையும் ஆற்றலையும் கொடுக்கின்றது. இப்பொழுதே நம்மால் இயலும் பொழுதே நாம் இதை எதிர்க்க வேண்டும். நான் இன்னும் ஆதாருக்குப் பதிவு செய்யவில்லை. இனி மேலும் பதிவு செய்வதாக இல்லை. இது எங்கே போய் முடிகிறது என்று பார்க்கலாம்.
ஆதார் அடையாள அட்டையினால் ஏற்படும் சில பிரச்சனைகள் பற்றி அறிய, scroll.in யில் வெளிவந்த Aadhaar debate: Why you should care about privacy even if you have absolutely nothing to hide கட்டுரையைக் காணவும்.