Gridbeam தரை மேசை

Gridbeam தரை மேசை

Published by Arun Isaac on

In other languages: English

Tags: gridbeam, project

என் முதல் gridbeam அறைகலன் செய்து முடித்தேன்—தரையில் அமர்ந்து வேலை செய்ய ஒரு மேசை.

சிறு மேசை; அதன் மீது கணினியும் அதன் பக்கம் பாயும் இருக்கிறது.

Figure 1: கணினியோடு gridbeam தரை மேசை

என் முதல் gridbeam அறைகலன் (furniture) செய்து முடித்தேன்—தரையில் அமர்ந்து வேலை செய்ய ஒரு மேசை. இதற்குத் தேவையான gridbeam யை B&Q யிலிருந்து வாங்கிய 1.5″×1.5″ குறுக்குவெட்டுடைய கம்பு கொண்டு நானே செய்தேன். பின் The Scaff Shop யிலிருந்து வாங்கிய மீட்டெடுக்கப்பட்ட சாரக்கட்டு பலகையை உள்ளிட்டேன். எல்லாவற்றையும் இணைக்க Orbital Fasteners யிலிருந்து joint connector திருகும் மறையும் பயன்படுத்தினேன். இறுதியாக மரத்தைப் பேணிக் காக்க ஆளிவிதை எண்ணெய் தேய்த்தேன். எதிர்காலத்தில் குளிருக்கு மேசை கீழ் வெப்பமாக்கத்தை நான் பொருத்தலாம். அல்லது அடர் மெத்தை (duvet) போதலாம். பார்ப்போம்.

gridbeam செய்ய மொத்தம் 192 துளைகள் இட வேண்டியிருந்தது. இதை மீண்டும் செய்ய நான் விரும்பவில்லை! gridbeam சந்தையில் வாங்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு, UK விலாவது, வாய்ப்பில்லை. எளிதாக துளையிட முறைகளையோ தானியங்கி கருவிகளையோ நாட வேண்டும்.

கூறுநிலை பொருள் (modular hardware) சுற்றுச்சூழல் நலத்திலும் தன்மான மேம்பாட்டிலும் பெரும்பயன் அளிக்கலாம். இதைத் தொலைநோக்குடன் கண்டறிந்து என்னை இப்பாதையில் கடத்திய Low Tech Magazine கட்டுரைக்கு நன்றி.

சிறு மேசைக்கான சட்டம்

Figure 2: Gridbeam தரை மேசை சட்டம்

சிறு மேசை

Figure 3: பலகையுடன் முழுமையடைந்த gridbeam தரை மேசை