வலைப்பதிவு இப்போது ஜெமினியிலும்
Published by Arun Isaac on
In other languages: English
Tags: மென்பொருள், ஜெமினி, lisp, emacs
என் வலைப்பதிவு இப்போது ஜெமினி வலையிலும் வெளியாகிறது. அனைத்துப் பதிவுகளும் HTTP வலையிலும் ஜெமினி வலையிலும் இருக்கும். இதைச் செய்ய வெகுநாள் நினைத்துள்ளேன். ஆனால் அண்மையில் இலண்டன் permacomputing மன்றத்தில் நிகழ்ந்த உரையாடல் என்னை ஊக்குவித்தது. என் ஜெமினி வலைத்தளத்தை gemini://systemreboot.net யில் கண்டு மகிழ்க. இதன் பின்புலப்பொறி பற்றி அறிய எண்ணம் என்னும் org mode யிலிருந்து HTML மற்றும் gemtext யிற்கும் பெயர்க்கும் என் மென்பொருளைக் காண்க.