மறையாக்கப்பட்ட மின்மடல்களை notmuch உடன் அகவரிசைப்படுத்தல்

மறையாக்கப்பட்ட மின்மடல்களை notmuch உடன் அகவரிசைப்படுத்தல்

Published by Arun Isaac on

In other languages: English

Tags: மென்பொருள்

மறையாக்கப்பட்ட மின்மடல்களைத் தேடலுக்காக notmuch உடன் அகவரிசைப்படுத்தல்

notmuch கொண்டு மறையாக்கப்பட்ட மின்மடல்களைத் தேடலுக்காக அகவரிசைப்படுத்த இயலாதென வெகுநாள் நினைத்தேன். எனக்கு மறையாக்கப்பட்ட மடல்கள் அனுப்புபவரின் மடல்களைத் தேட இது பெரும் இடையூறாக இருந்தது. ஆனால் இதை எப்படிச் சரிச் செய்வதெனக் கண்டுபிடித்துவிட்டேன்—~/.notmuch-config இல் index.decrypt யை true என அமைக்க வேண்டும். மேலும் அறிய notmuch-config man பக்கத்தைக் காண்க. இதை அமைத்தப் பின் இனி மேல் வரும் புதிய மறையாக்கப்பட்ட மடல்கள் அகவரிசைப்படுத்தப்படும். பழைய மடல்களை அகவரிசைப்படுத்த notmuch reindex '*' கட்டளையை இயக்குக.

~/.notmuch-config இன் index பகுதி இதைப் போன்றிருக்க வேண்டும்.

[index]
decrypt=true