தான்தோன்றி G-கோவை உரைநிரல் ஓரம் சீர்ப்படுத்து
Published by Arun Isaac on
In other languages: English
Tags: guix, மென்பொருள், scheme, lisp
தான்தோன்றி G-கோவை உரைநிரல்களை வழுநீக்க ஒருச் சிறு குறிப்பு!
சிறு குறிப்பு!
G-கோவைகளிலிருந்து program-file
அல்லது gexp->script
மூலம் தானாக உருவாக்கப்பட்ட உரைநிரல்களை ஆயவும் வழுநீக்கவும் தேவை உண்டு. ஆனால் அவை அடைப்புக் குறிகளின் அவியலாக கிடங்கிற்கு எழுதப்படுகின்றன. அவற்றை Emacs guix-scheme-mode
கொண்டு சீர்ப்படுத்தலாம். guix-scheme-mode
Emacs-Guix யில் உள்ளது.
நீங்கள் Emacs பயன்படுத்தாவிட்டால், கீழ் காணும் ஒற்றை வரி guile கட்டளையைப் பயன்படுத்தலாம்.
cat /gnu/store/…-foo | guile -c '((@ (ice-9 pretty-print) pretty-print) (read))'