தமிழ் வட்டார அமைப்பில் (locale) ஓரகல எழுத்துரு (monospace font)

தமிழ் வட்டார அமைப்பில் (locale) ஓரகல எழுத்துரு (monospace font)

Published by Arun Isaac on

In other languages: English

Tags: தமிழ்

தமிழ் வட்டார அமைப்பில் ஆங்கில ஓரகல எழுத்துருக்கள் சரியாக தோன்றுவதில்லை. அதைச் சரி செய்வதெப்படி?

GNU/Linux கணினிகளில் எழுத்துருக்களைத் தேர்ந்தெடுக்க பல மென்பொருட்கள் fontconfig நிரலைப் பயன்படுத்துகின்றன. ஆனால் தமிழ் வட்டாரம் (locale) அமைந்திருந்தால் fontconfig ஆங்கில ஓரகல எழுத்துருக்களைச் (monospace font) சரியாக தேர்ந்தெடுப்பதில்லை. fontconfig தமிழ் வட்டார அமைப்பில் தமிழ் மொழிக்கு முதலுரிமை கொடுத்து ஆங்கில ஓரகல எழுத்துருக்கு மாறாக தமிழ் எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கிறது. இதனால் ஓரகல எழுத்துருக்கள் தோன்ற வேண்டிய இடங்களில் தோன்றா. இதைச் சரி செய்ய fontconfig வட்டார அமைப்பிலிருந்து மொழியை எடுக்காது ஆங்கில மொழியையே எடுக்க வேண்டும். இதற்கு FC_LANG சூழல் மாறியை (environment variable) en என நிறுவ வேண்டும்.

export FC_LANG=en

FC_LANG சூழல் மாறி fontconfig கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FC_LANG அமைக்கப்பட்ட முன்பும் பின்பும் வேற்றுமையைக் காட்டும் Nyxt வலை உலாவி திரைப்பிடிப்புகளைக் கீழ்காண்க.

Nyxt வலை உலாவி GitHub பக்கம் ஒன்றில் நிரற்றொடரை வெவ்வேற்றகல எழுத்துருவில் (proportional font) காட்டுகிறது

Figure 1: FC_LANG அமைக்கப்படாதப் பொழுது நிரற்றொடர் ஓரகல எழுத்துருவில் தோன்றவில்லை

Nyxt வலை உலாவி GitHub பக்கம் ஒன்றில் நிரற்றொடரை ஓரகல எழுத்துருவில் காட்டுகிறது

Figure 2: FC_LANG அமைக்கப்பட்டதும் நிரற்றொடர் ஓரகல எழுத்துருவில் தோன்றுகிறது