சிம்ரன் பின் SPQR

சிம்ரன் பின் SPQR

Published by Arun Isaac on

In other languages: English

Tags: திரைப்படம், தமிழ்த்திரைப்படம்

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் ரோமாபுரியின் SPQR சின்னமும் கழுகும் முன் சிம்ரன் தோன்றுவார்.

முன்னணியில் சிம்ரன் குதிரை வண்டியில் வருகிறார். பின்னணியில் குதிரை வீரர் SPQR சின்னத்தையும் ரோம கழுகையும் ஏந்தி வருகின்றனர்.

Figure 1: துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் சிம்ரன் SPQR முன் தோன்றும் காட்சி

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் தொடுதொடுவெனவே வானவில் பாட்டின் முதல் காட்சியில் ரோமாபுரியின் SPQR சின்னத்தையும் கழுகையும் ஏந்தி வரும் குதிரை வீரர் முன் சிம்ரன் தோன்றுவார். SPQR என்றால் Senatus Populusque Romanus என்பதன் சுருக்கும். இது இலத்தீன் மொழியில் The Senate and People of Rome, அதாவது ரோமாபுரி ஆளவையும் மக்களும், எனப் பொருள்படும். இது என்னவென்று அறிந்து தான் படத்தில் அமைத்தனரா அல்லது ஏதோ அழகுப் பொருளென்றெண்ணி இக்காட்சியில் இட்டனரா? வேடிக்கை! 😝 ரோமர் அவரது சின்னம் எதிர்காலத்தில் இப்படி ஓர் இடம்பெறுமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்! கிறிஸ்தவ கோயில் துணிகளில் அரபு இஸ்லாமிய எழுத்து அமைவது நினைவுக்கு வருகிறது1.

Footnotes:

1

https://www.laphamsquarterly.org/fashion/crusader-chic மேற்கோள்: Inscriptions with Allah’s blessing abound in Christian churches, transformed into orphreys, elaborately embroidered ornamental stripes or bands on ecclesiastical vestments. A textile with embroidered and woven Arabic inscriptions, quoting the Qur’an at length, might proclaim Muhammad the messenger of God and announce the name of the reigning caliph and royal manufacture in which the textile was produced, all while serving as a burial shroud for a Christian saint.